Skip to main content

இயற்கை முறையில் பூங்கார் நெல் சாகுபடி

 Poonkar paddy cultivation in a Organic way



பூங்கார் நெல் 


இது ஒரு எழுபது முதல் என்பது நாள் வயது கொண்ட  குறுகிய கால நெல் பயிராகும் . எல்லா பருவத்திற்க்கும் ஏற்ற ரகமாகும் . அதிக வெள்ளம் உள்ள சமயங்களிலும் அல்லது வரட்சி உள்ள நேரத்திலும் நன்கு தாங்கி வளரக்கூடிய ரகமாகவும், கதிர் அறுவடை சமயத்தில் மழை  பெய்தால் கூட நாப்பது நாட்கள் விதை உறக்கத்திற்கு பின்பே முளைக்கும் , நேர் கதிர்கள் நீருக்குள் மூழ்கி இருந்தாலும் முளைக்காது . முன்னாளில் இதனை "அறுபதாம் கொடை" என்று அழைக்கப்பட்டது நோய் எதிர்ப்பு கொண்ட ரகமாகவும் அதிக மகசூல் தரக்கூடியது .  இட்லி  மற்றும் தோசை செய்வதற்க்கு சிறந்த ரகமாகும் மேலும் இதன் தவிடு சுவையானதாக இருக்கும்.


மருத்துவ குணம் 




பூங்கார் அரிசியை  தொடர்ந்து சாப்பிடுவதால் உடலுக்கு அதிக வலிமை கிடைக்கிறது ஒரு இயலப்பான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும், கர்ப்பிணி பெண்களுக்கு இயல்பான பிரசவம் நடைபெறும் .


நாற்றங்கால் தயாரிப்பு 



தமிழ்நாட்டில் எல்ல மாவட்டங்களில் உள்ள மண் வகைகளுக்கு ஏற்றது இந்த பூங்கார் ரகம் ஆண்டுக்கு மும்முறை சாகுபடி செய்யலாம். 
அனைத்து பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம் என்றாலும் கார் , இடைக்கார் மற்றும் சம்பா , இடைச்சம்பா பட்டங்களில் செய்வது சிறந்தது. நிலத்தை 2 முறை உழுது ஒரு வாரம் காயவிட்டபின்னர்  இரண்டு வண்டி தொழு உரம் இட்டு உழ வேண்டும்.இரண்டு ஏக்கர் நடவு செய்ய ஐந்து சென்ட் தேவைப்படும் 20  கிலோ பூங்கார் நெல்லை எடுத்து ஒரு மூன்று மணி நேரம் நிழலில் உலர்த்தி , 20 கிலோ கொள்ளும் அளவுக்கு ஒரு ட்ரம்மை எடுத்து கொண்டு அதி நீரை ஊற்றி முழுகும் அளவுக்கு நெல்லை கொட்ட வேண்டும் . மிதக்கும் தரமற்ற விதைகளை எடுத்துவிட்டு பன்னிரெண்டு மணி நேரம் ஊறவைக்கவேண்டும். பின்பு ஒரு சாக்கில் போட்டு இறுக்கி கட்டிவிட வேண்டும். 10 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி பஞ்சகாவியவை கலந்து அந்த சாக்கின் மீது ஊற்றி விட வேண்டும் , வைக்கோலை வைத்து மூடி இருபத்திநான்கு மணிநேரம் கழித்து லேசாக முளைத்திருக்கும் அதை நாற்றங்காலில் தூவி விட வேண்டும் .விதைத்த மூன்று, பத்து , மற்றும் 15  நாட்களில் பஞ்சகாவிய தெளிக்கலாம் ,கைத்தெளிப்பானை பயன்படுத்துவது நல்லது .

வயலில்



22 ஆம் நாள்  நாற்றுகளை பறித்து வயல்களில் நடலாம் நடுவதற்க்கு முன் பஞ்சகவியாவில் நனைத்து பத்து நிமிடங்கள் வைத்து பின்னர் நடவு செய்யலாம். நடவு செய்ததிலிருந்து 10 நாட்கள் இடைவெளியில் ஏக்கருக்கு 200 மில்லி பஞ்சகாவியவை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தரைவழி  கொடுக்கவேண்டும் . 15 நாட்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு பூச்சி விரட்டி தெளிக்கவேண்டும் . 15 மற்றும் 35 வது  நாள் மீன் அமிலம் கொடுக்கலாம் . பத்து நாட்கள் இடைவெளியில் இரண்டு தடவை ஜீவாமிர்தம் தரைவழி கொடுக்கலாம் .  70 முதல் 80 வது  நாள் அறுவடைக்கு வரும் .

Comments

  1. casino for gamblers at your local location
    Online 경상남도 출장샵 gambling is legal in Michigan. Online gambling has been 경산 출장안마 legalized in Michigan and Pennsylvania in recent years. The online 아산 출장마사지 gambling  Rating: 4.6 · ‎Review 태백 출장샵 by Dr. 구리 출장마사지

    ReplyDelete

Post a Comment

Popular Posts

நெல் பயிரும் பட்டங்களும்

பாரம்பரிய நெல் ரகங்களுக்கு பட்டங்கள் : குறுகிய கால ரகங்கள்(60 முதல் 120 நாட்கள்) அறுபதாம் குறுவை,  பூங்கார்,  கருங்குறுவை,  குழியடிச்சான்,  கார்,  சிங்கினிகார்,  அன்ன மழகி,  உவர்முன்டா,  குள்ளங்கார் போன்ற குறுவைப் பட்டத்துக்கு ஏற்றவை.  மத்தியகால ரகங்கள்(130 முதல் 140 நாட்கள்), தூயமல்லி, இலுப்பைப்பூ சம்பா, சீரகச் சம்பா, வாசனை சீரகச் சம்பா, தேங்காய்ப்பூ சம்பா, கவுனி, சிகப்புக் கவுனி, சேலம் சன்னா, சம்பா மோசனம், குடவாழை போன்ற சம்பா பட்டத்துக்கு ஏற்றவை.  நீண்டகால ரகங்கள்  (140 முதல் 200 நாட்கள்) மாப்பிள்ளைச் சம்பா, காட்டுயானம், ஒட்டடையான், கருடன் சம்பா, தங்கச் சம்பா, நீலஞ்சம்பா, வாடன் சம்பா  ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையான காலத்துக்கு ஏற்றவை  தமிழ்நாட்டில் எந்தெந்தப் பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது? ”நவரை, சொர்ணவாரி, கார், குருவை, முன் சம்பா, சம்பா, பின் சம்பா, தாளடி” ஆகிய பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். நவரைப் பட்டம்! : * டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலம், நவரைப் பட்டம். இப்பட்டத்துக்கு 120 நாட்களுக்குக் குறைவான வயது கொண்

நெல் சாகுபடியில் உயிர் உரங்களின் முக்கியத்துவம்

Importance of bio-fertilizers in paddy cultivation அடி உரம் கொடுக்க முடியாத இடங்களில் அல்லது அடி உரமா தொழு உரங்கள் கிடைக்காத இடங்களில் இந்த உயிர் உரங்களை அடி உரமா பயன்படுத்தலாம். குறிப்பா , சம்பா பயிர் செய்யும் நேரங்களில் வேண்டிய அளவு தொழு உரங்கள் கிடைப்பதில்லை, ஆனால்  அந்த மாதிரி நேரங்களில் அரசாங்கமே 4 டிராக்டர் தொழு உரம் போடணும் சொல்கிறது . ஒரு ஏக்கருக்கே 4 லோடு என்றால் மொத்த பரப்பளவிற்கு கிடைப்பது சிரமம் அப்படி கிடைத்தாலும் தொழு உரத்தின் விலை அதிகமாகி போய்க்கொண்டிருக்குகிறது  பல பகுதிகளில் 3000 தாண்டி டிராக்டர் லோடு விற்கிறது . அதுவே மானியத்தில் உயிர் உரங்கள் வாங்கினால் 1 கிலோ 30 ரூபாய் கிடைக்கும்  10 கிலோவாக வாங்கினாலும் 300 ரூபாய்தான் வரும் மூவாயிரம் எங்கே இருக்கிறது 300 எங்கே இருக்கிறது ஆகவே தேவையான அளவு வாங்கி அடி உரமாக இடலாம் . அடி உரத்தில் உயிர் உரங்கள்  அசோஸ் பயிரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா கொடுக்கலாம் இது இரண்டும் கொடுப்பது நல்லது இதை தவிர்த்து 60வது நாள் நெல் பயிர் பூக்கிறது என்றால் 30 வது நாள் பயிர் வளரக்கூடிய நேரத்திலும் 60 வது நாள் பூக்கும் சமயத்திலும் பூத்து முடித்

நெல் அதிகம் வேர் பிடிக்க என்ன செய்யலாம்

What can be done to root more paddy   நெல் அதிகம் விளைச்சல் பெற நாம் முக்கியமாக பார்த்துக்கொள்ள வேண்டியது பயிரில் வேர் அதிகம் வளர்வதுபோல் பார்த்து கொள்ளவேண்டும் , வேர் அதிகம் இருந்தாலே பயிர் நன்றாக இருக்கும் . வேர் நன்றாக வளர வேண்டுமென்றால் பயிர் சரியாக இருக்கவேண்டும் அதற்கு அடியுரம் தேவை . அடுத்து நட்டு சரியான நாட்களில் களையெடுப்பது முக்கியம் கையாலோ அல்லது கோனோ வீடர் போட்டோ எடுப்பது முக்கியம் வேரோடு எடுத்து விட்டாலே நெல்லுக்கு வேர் பரவுவதற்கு இடம் கிடைக்கும்.  களை எடுத்த அன்றோ அல்லது அதற்கு மறு நாளோ தேவையான இடு பொருட்கள் கொடுக்கவேண்டும் , அப்படி கொடுத்தாலே அந்த இடத்திலிருந்து நன்றாக இருக்கும் அடுத்து மாதம் ஒரு முறை கட்டாயமாக சூடோமோனஸ் அல்லது பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ்  ஒரு ஏக்கருக்கு 1 லிட்டர் தரை வழி மற்றும் 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து தெளித்துவிடவேண்டும் .  அடுத்து பூ எடுக்கும் காலத்திற்கு முந்துன காலத்தில ஜீவாமிர்தம் அதனுடன் கடலை புண்ணாக்கு கரைசல் சேர்ந்து கொடுக்கலாம் அல்லது கடலை புன்னாக்கு கரைசல் மட்டும் கொடுக்கலாம் ஒருவேளை இதை செய்ய முடியவில்லையெனில் பாஸ்போ பாக்டீரியா ஒரு ஏக்கருக்