பாரம்பரிய நெல் ரகங்களுக்கு பட்டங்கள் : குறுகிய கால ரகங்கள்(60 முதல் 120 நாட்கள்) அறுபதாம் குறுவை, பூங்கார், கருங்குறுவை, குழியடிச்சான், கார், சிங்கினிகார், அன்ன மழகி, உவர்முன்டா, குள்ளங்கார் போன்ற குறுவைப் பட்டத்துக்கு ஏற்றவை. மத்தியகால ரகங்கள்(130 முதல் 140 நாட்கள்), தூயமல்லி, இலுப்பைப்பூ சம்பா, சீரகச் சம்பா, வாசனை சீரகச் சம்பா, தேங்காய்ப்பூ சம்பா, கவுனி, சிகப்புக் கவுனி, சேலம் சன்னா, சம்பா மோசனம், குடவாழை போன்ற சம்பா பட்டத்துக்கு ஏற்றவை. நீண்டகால ரகங்கள் (140 முதல் 200 நாட்கள்) மாப்பிள்ளைச் சம்பா, காட்டுயானம், ஒட்டடையான், கருடன் சம்பா, தங்கச் சம்பா, நீலஞ்சம்பா, வாடன் சம்பா ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையான காலத்துக்கு ஏற்றவை தமிழ்நாட்டில் எந்தெந்தப் பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது? ”நவரை, சொர்ணவாரி, கார், குருவை, முன் சம்பா, சம்பா, பின் சம்பா, தாளடி” ஆகிய பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். நவரைப் பட்டம்! : * டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலம், நவரைப் பட்டம். இப்பட்டத்துக்கு 120 நாட்களுக்குக் குறைவான வயது கொண்
அனைத்து வித நெல் சாகுபடி மேலாண்மை மற்றும் இயற்கை முறை பூச்சி நோய் கட்டுப்பாடு , நெல் வகைகள் மற்றும் இயற்கை உர மேலாண்மை