Skip to main content

Posts

Showing posts with the label சொர்ணமசூரி நெல் பயிரின் பராமரிப்பு

சொர்ணமசூரி நெல் பயிரின் பராமரிப்பு

Paddy Crop - sornamasoori  வயது : 130 லிருந்து 135 நாள் வரை*. நாற்றுக்களை குறைந்த நாள் வயதில்(16 லிருந்து 24 நாள்)  நடவு செய்வதால் பக்க கிளைப்புகள் மிக அதிகமான எண்ணிக்கையில் உருவாகும். ஒருங்கிணைந்த உரம், களை, தெளிப்பு, பாசன நிர்வாக முறைகளை திறம்பட கையாளுவதன் மூலம் நெல்லின் வளர்இளம் பருவத்தில் ஒத்த வயதுடைய பக்க கிளைப்புகள் உருவாகுவதற்கு ஏதுவாகும். இதன் மூலம்  தாமதமாக, பின்வரும் கிளைப்புகளில் நெற்கதிர்கள் இல்லாமல் போவதை தடுக்கலாம் . ஒருங்கிணைந்த பயிர் வளர்ச்சி முறையால் தோன்றும் பக்ககிளைப்புகள் அனைத்திலும் நெற்கதிர்கள் உருவாகி நிறைந்த மகசூலை அடையலாம். ஓருங்கிணைந்த, பயிர்பாதுகாப்பு மற்றும் பயிர்வளர்ச்சி அட்டவணையை செயல்படுத்துவதால், பயிரின் வளர்ச்சியை சிறப்பாக முறைபடுத்தலாம். நடவு நிலத்தில் அடியுரமாக ஏக்கருக்கு 200 கிலோ ஊட்டமேற்றிய தொழு உரம், 200 லிட்டர் ஜீவாமிர்தம், 2 கிலோ சூடோமோனாஸ் பாசனநீரில் கலந்து விட்டு பறம்பு ஓட்டி நிலத்தை சமன்படுத்த வேண்டும். நாற்றுக்களை நடவு போட்ட பின்னர், நிலத்தில் லேசான இறுக்கம் வந்த பின்னர் தண்ணீர் பாய்ச்சுவதால், நாற்றின் வேர்பிடிப்புதிறன் சிறப்பாக இருக்கும். நட