Skip to main content

Cr நெல் குருத்து பூச்சி கட்டுப்பாடு மற்றும் BPT நெல் பயிர் பாதுகாப்பு முறைகள்

  

Cr Paddy Pest Control and BPT paddy Crop Protection Methods



பயிர் PPT நெல் 60  நாள் ஆகிறது. பயிர் பாதுகாப்பு என்ன செய்யலாம். 


நெல் பயிரில் அதிகமான பிரச்சனைகள் எங்கிருந்து வரும்மென்றால் அது புழுக்களால்தான் , புழு வராமல் இருக்க தடுப்பு முறைகள் செய்யவேண்டும் 
அதில் முக்கியமானது வேப்பெண்ணை கரைசல் , பொன்னீம் கரைசல் , அக்னீ அஸ்த்திரம் , ஜீவாமிர்தம்  , கற்பூரக்கரைசல் இந்த நான்கு  பொருட்களில் ஏதாவது ஒன்றை தொடர்ச்சியாக எல்லா  கலக்கட்டத்திலையும் அதாவது பயிர் முற்றி மஞ்சளாகுர  காலம் வரை  எட்டுநாளைக்கு அல்லது பத்து நாளைக்கு ஒரு முறை தெளிப்பதால் நிறைய பலன்கள் இருக்கும் முக்கியமாக வெள்ளை பூச்சி வந்து புழு வராமல் இருப்பதற்க்கு ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும்.அடுத்ததாக பூ வந்து பால் கதிர் வருது, பால் கதிர் வரும்பொழுது உறுஞ்சாமல் இருப்பதற்க்கு இந்த திரவங்களைபயன்படுத்துவதால் நல்ல பலன்கள் தரும் 

நெல் மணிகளில் நோய்கள் வராமல் இருப்பதற்க்கும் இதை பயன்படுத்தலாம் BPT நெல் ரகத்தில் குலை நோய் தாக்குவதற்க்கு அதிக வாய்ப்பு , முன் எச்சரிக்கையாக   தெளிப்பது நல்லது . இல்லையென்றால் பெவேரிய பேசியானா , பேசில்ஸ் சப்ஸ்டில்ஸ்  இது இரண்டையும் ஒன்றாக அடிக்காமல் 5 நாள் இடைவெளியில் மாறி மாறி அடிக்கவேண்டும் 

Cr நெல் சாகுபடி செய்து உள்ளேன் கதிர் வரும்போது குருத்துபூச்சி தாக்குதல் உள்ளது எப்படி கட்டுப்படுத்தலாம் 



பெவேரியா பேசியான மருந்து வாங்கி நெல் இலைகள் படும் மாதிரி முன்னும் பின்னும் தெளிக்க வேண்டும் . முக்கியமா இரண்டு வரிசைக்கு நடுவுல ஸ்ப்ரேயர் வாய் இருக்கிறமாதிரி உள் பக்கத்தில் தெளிக்கவேண்டும் . தெளிப்பதற்க்கு  முன் வயலில் தண்ணீர் இருந்தால் முழுவதும் எடுத்து விட வேண்டும் . தரை வலி எந்த வித  சத்துக்களும் கொடுக்கக்கூடாது . இதை ஒருதடவை செய்தால் மறுபடியும் ஆறாவது நாள் மறுபடியும் தெளிக்க வேண்டும் 
இதை தவிர்த்து ட்ரைக்கோகிரம்மா ஒட்டும் அட்டைகள் இருக்கும் அதை வாங்கி கட்டி தொங்க விடலாம் .

Comments

  1. Then, the sixty five free spins might be credited to 바카라 사이트 your account. 7Bit Casino is also be|can be} tremendous versatile when it comes to of|in relation to} withdrawals. There is broad range|a variety} of choices right here, with “regular” payment methods including EcoPayz, Neteller, Skrill and cryptocurrencies . Meanwhile, the most you'll be able to|you presumably can} guess in a single go is $10, which ensures you’ll ready to|be succesful of|have the ability to} make your $40 free chip last somewhat longer! Eligible video games are limited to pokies, board video games, scratch cards and Keno.

    ReplyDelete

Post a Comment

Popular Posts

நெல் பயிரும் பட்டங்களும்

பாரம்பரிய நெல் ரகங்களுக்கு பட்டங்கள் : குறுகிய கால ரகங்கள்(60 முதல் 120 நாட்கள்) அறுபதாம் குறுவை,  பூங்கார்,  கருங்குறுவை,  குழியடிச்சான்,  கார்,  சிங்கினிகார்,  அன்ன மழகி,  உவர்முன்டா,  குள்ளங்கார் போன்ற குறுவைப் பட்டத்துக்கு ஏற்றவை.  மத்தியகால ரகங்கள்(130 முதல் 140 நாட்கள்), தூயமல்லி, இலுப்பைப்பூ சம்பா, சீரகச் சம்பா, வாசனை சீரகச் சம்பா, தேங்காய்ப்பூ சம்பா, கவுனி, சிகப்புக் கவுனி, சேலம் சன்னா, சம்பா மோசனம், குடவாழை போன்ற சம்பா பட்டத்துக்கு ஏற்றவை.  நீண்டகால ரகங்கள்  (140 முதல் 200 நாட்கள்) மாப்பிள்ளைச் சம்பா, காட்டுயானம், ஒட்டடையான், கருடன் சம்பா, தங்கச் சம்பா, நீலஞ்சம்பா, வாடன் சம்பா  ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையான காலத்துக்கு ஏற்றவை  தமிழ்நாட்டில் எந்தெந்தப் பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது? ”நவரை, சொர்ணவாரி, கார், குருவை, முன் சம்பா, சம்பா, பின் சம்பா, தாளடி” ஆகிய பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். நவரைப் பட்டம்! : * டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலம், நவரைப் பட்டம். இப்பட்டத்துக்கு 120 நாட்களுக்குக் குறைவான வயது கொண்

நெல் சாகுபடியில் உயிர் உரங்களின் முக்கியத்துவம்

Importance of bio-fertilizers in paddy cultivation அடி உரம் கொடுக்க முடியாத இடங்களில் அல்லது அடி உரமா தொழு உரங்கள் கிடைக்காத இடங்களில் இந்த உயிர் உரங்களை அடி உரமா பயன்படுத்தலாம். குறிப்பா , சம்பா பயிர் செய்யும் நேரங்களில் வேண்டிய அளவு தொழு உரங்கள் கிடைப்பதில்லை, ஆனால்  அந்த மாதிரி நேரங்களில் அரசாங்கமே 4 டிராக்டர் தொழு உரம் போடணும் சொல்கிறது . ஒரு ஏக்கருக்கே 4 லோடு என்றால் மொத்த பரப்பளவிற்கு கிடைப்பது சிரமம் அப்படி கிடைத்தாலும் தொழு உரத்தின் விலை அதிகமாகி போய்க்கொண்டிருக்குகிறது  பல பகுதிகளில் 3000 தாண்டி டிராக்டர் லோடு விற்கிறது . அதுவே மானியத்தில் உயிர் உரங்கள் வாங்கினால் 1 கிலோ 30 ரூபாய் கிடைக்கும்  10 கிலோவாக வாங்கினாலும் 300 ரூபாய்தான் வரும் மூவாயிரம் எங்கே இருக்கிறது 300 எங்கே இருக்கிறது ஆகவே தேவையான அளவு வாங்கி அடி உரமாக இடலாம் . அடி உரத்தில் உயிர் உரங்கள்  அசோஸ் பயிரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா கொடுக்கலாம் இது இரண்டும் கொடுப்பது நல்லது இதை தவிர்த்து 60வது நாள் நெல் பயிர் பூக்கிறது என்றால் 30 வது நாள் பயிர் வளரக்கூடிய நேரத்திலும் 60 வது நாள் பூக்கும் சமயத்திலும் பூத்து முடித்

நெல் அதிகம் வேர் பிடிக்க என்ன செய்யலாம்

What can be done to root more paddy   நெல் அதிகம் விளைச்சல் பெற நாம் முக்கியமாக பார்த்துக்கொள்ள வேண்டியது பயிரில் வேர் அதிகம் வளர்வதுபோல் பார்த்து கொள்ளவேண்டும் , வேர் அதிகம் இருந்தாலே பயிர் நன்றாக இருக்கும் . வேர் நன்றாக வளர வேண்டுமென்றால் பயிர் சரியாக இருக்கவேண்டும் அதற்கு அடியுரம் தேவை . அடுத்து நட்டு சரியான நாட்களில் களையெடுப்பது முக்கியம் கையாலோ அல்லது கோனோ வீடர் போட்டோ எடுப்பது முக்கியம் வேரோடு எடுத்து விட்டாலே நெல்லுக்கு வேர் பரவுவதற்கு இடம் கிடைக்கும்.  களை எடுத்த அன்றோ அல்லது அதற்கு மறு நாளோ தேவையான இடு பொருட்கள் கொடுக்கவேண்டும் , அப்படி கொடுத்தாலே அந்த இடத்திலிருந்து நன்றாக இருக்கும் அடுத்து மாதம் ஒரு முறை கட்டாயமாக சூடோமோனஸ் அல்லது பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ்  ஒரு ஏக்கருக்கு 1 லிட்டர் தரை வழி மற்றும் 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து தெளித்துவிடவேண்டும் .  அடுத்து பூ எடுக்கும் காலத்திற்கு முந்துன காலத்தில ஜீவாமிர்தம் அதனுடன் கடலை புண்ணாக்கு கரைசல் சேர்ந்து கொடுக்கலாம் அல்லது கடலை புன்னாக்கு கரைசல் மட்டும் கொடுக்கலாம் ஒருவேளை இதை செய்ய முடியவில்லையெனில் பாஸ்போ பாக்டீரியா ஒரு ஏக்கருக்