Skip to main content

ADT 45 நெல் பயிருக்கு என்னென்ன பயிர் பாதுகாப்பு மற்றும் நோய் தடுப்பு

What is ADT 45 Crop Protection and Disease Prevention for Paddy Crops?




பாக்டீரியல் குலை நோய்

ADT 45 நெல் பயிருக்கு மழைக்காலம் என்று பார்த்தால் பாக்டீரியல் குலை நோய் தாக்கம் அதிகமாக இருக்கும் , வெளியே தெரியுறமாதிரி பார்த்தா பாக்டீரியல் குலை நோய் எப்படி இருக்கும்னு சொன்னா நாலு இலை இருந்தால் இரண்டு இலை பச்சையாகவும் இரண்டு இல்லை பிரவுன் ஆக  இருக்கும்   அப்படி இருந்தால் உடனடியாக பேசில்லஸ் சாப்ஸ்டில்ஸ 10 லிட்டருக்கு 50 மில்லி தெளித்து விடுங்கள் , தரை வழி ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் கொடுக்கலாம் .

ஆனைக்கொம்பன்



நடவு நட்ட 40 வைத்து நாள் அதாவது நாற்று நட்ட 20 வது நாள் யானைக்கொம்பன் தாக்க வாய்ப்பு இருக்கும் இது புழுக்களில் இருந்து வரக்கூடியது . இதை கட்டுப்படுத்த பெவேரிய பேசியான 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து தெளிக்கலாம் இது ADT 45 ல் வரும் புகையானையும் கட்டுப்படுத்தும் .

கதிர்நாவாய் பூச்சி

70 வது நாள் முதல் பூக்கும் பூத்து  முடுச்ச ஒரு வாரத்துக்கு அப்புறம் கதிர்நாவாய் பூச்சி தாக்கம் இருக்கலாம் . இந்த நேரத்தில் வசம்பு கரைசல் தயார் செய்து கொடுக்கலாம் 

புகையான்

85 வது நாள் முதல் 100 வது நாள் வரை புகையான் தாக்குதல் மறுபடியும் வரலாம் பெவேரிய தெளிக்கலாம் ADT 45 ல் இலை மூடுனமாதிரி இருந்தால் விருச்சு விடவேண்டும் . வெள்ளை பூச்சிகள் பறந்தால் கவனம் தேவை .

பச்சை புழுக்கள்

புழுக்கள்தான் இந்த நேரத்தில் அதிகமாக தாக்கும் அதற்க்கு அக்னி அஸ்திரம் ஐந்திலை கரைசல் பதிலைக்கரைசல் , 8 அல்லது 10 நாளைக்கு ஒரு தெளிச்சுகிட்டே வந்தால் பெரிய நோய்கள் இல்லாமல் தடுக்கலாம் மழைக்காலம் ஆனாலும் பனிக்காலம் ஆனாலும் பூச்சிகளுக்கு சாதகமாக இருக்கும் . பச்சை புழுக்கள் தென்பட்டால் பெவேரியா அல்லது பேசில்ஸ் துருஞ்சியன்சிஸ் 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து கொடுக்கவேண்டும் . மலை வேளையில் தெளிக்கலாம் 1 , 7 ,14வது  நாள் தெளிக்கலாம் 


Comments

Popular Posts

நெல் பயிரும் பட்டங்களும்

பாரம்பரிய நெல் ரகங்களுக்கு பட்டங்கள் : குறுகிய கால ரகங்கள்(60 முதல் 120 நாட்கள்) அறுபதாம் குறுவை,  பூங்கார்,  கருங்குறுவை,  குழியடிச்சான்,  கார்,  சிங்கினிகார்,  அன்ன மழகி,  உவர்முன்டா,  குள்ளங்கார் போன்ற குறுவைப் பட்டத்துக்கு ஏற்றவை.  மத்தியகால ரகங்கள்(130 முதல் 140 நாட்கள்), தூயமல்லி, இலுப்பைப்பூ சம்பா, சீரகச் சம்பா, வாசனை சீரகச் சம்பா, தேங்காய்ப்பூ சம்பா, கவுனி, சிகப்புக் கவுனி, சேலம் சன்னா, சம்பா மோசனம், குடவாழை போன்ற சம்பா பட்டத்துக்கு ஏற்றவை.  நீண்டகால ரகங்கள்  (140 முதல் 200 நாட்கள்) மாப்பிள்ளைச் சம்பா, காட்டுயானம், ஒட்டடையான், கருடன் சம்பா, தங்கச் சம்பா, நீலஞ்சம்பா, வாடன் சம்பா  ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையான காலத்துக்கு ஏற்றவை  தமிழ்நாட்டில் எந்தெந்தப் பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது? ”நவரை, சொர்ணவாரி, கார், குருவை, முன் சம்பா, சம்பா, பின் சம்பா, தாளடி” ஆகிய பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். நவரைப் பட்டம்! : * டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலம், நவ...

நெல் சாகுபடி உர நிர்வாகம்- நெல் நாற்று நடவு நட்டு 20 நாட்கள் ஆகிறது என்ன இயற்கை இடு பொருட்கள் கொடுக்கலாம்

நெல் சாகுபடி உர நிர்வாகம் Oraganic-Fertilizer-Management-in-Paddy-Cultivation முதலில் 15வது  நாலும் 30வது நாளும் களை எடுப்பது முக்கியம் . களை எடுத்த அன்றே ஜீவாமிர்தம் அல்லது மீன் அமிலம் கொடுக்க வேண்டும் ஒரு ஏக்கருக்கு ஜீவாமிர்தம் என்றால் 200 லிட்டரும் மீன் அமிலமாக இருந்தால் ஏக்கருக்கு ஒரு லிட்டரும் கொடுக்கலாம் . வாரம் ஒரு முறை அல்லது 5 நாட்களுக்கு ஒரு முறை மீன் அமிலம் , பஞ்சகவ்வியா , ஜீவாமிர்தம் அல்லது இ எம் கரைசல் ஏதாவது ஒன்றை தரைவழி கொடுக்கலாம் . நல்ல வழிப்பான இலை அதே சமயம் பஞ்சகவ்வியா, இ எம் கரைசல் ஏதாவது ஒன்றை 15 நாள்களுக்கு ஒரு முறை தெளிப்பது நல்ல பலன்களை கொடுக்கும் . முதல் 60 நாட்களில் வளர்வதுதான் வளர்ச்சி , அதிகமான தூர் எடுப்பதும் நல்ல வழிப்பான இலைகளும் ஒரு அமைப்பான நெல்லையும் கொண்டுவர வேண்டும் படத்தில் இருப்பது போல் கிளி பச்சை நிறத்திலிருந்து கரும்பச்சை நிறத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் 

நெல் அதிகம் வேர் பிடிக்க என்ன செய்யலாம்

What can be done to root more paddy   நெல் அதிகம் விளைச்சல் பெற நாம் முக்கியமாக பார்த்துக்கொள்ள வேண்டியது பயிரில் வேர் அதிகம் வளர்வதுபோல் பார்த்து கொள்ளவேண்டும் , வேர் அதிகம் இருந்தாலே பயிர் நன்றாக இருக்கும் . வேர் நன்றாக வளர வேண்டுமென்றால் பயிர் சரியாக இருக்கவேண்டும் அதற்கு அடியுரம் தேவை . அடுத்து நட்டு சரியான நாட்களில் களையெடுப்பது முக்கியம் கையாலோ அல்லது கோனோ வீடர் போட்டோ எடுப்பது முக்கியம் வேரோடு எடுத்து விட்டாலே நெல்லுக்கு வேர் பரவுவதற்கு இடம் கிடைக்கும்.  களை எடுத்த அன்றோ அல்லது அதற்கு மறு நாளோ தேவையான இடு பொருட்கள் கொடுக்கவேண்டும் , அப்படி கொடுத்தாலே அந்த இடத்திலிருந்து நன்றாக இருக்கும் அடுத்து மாதம் ஒரு முறை கட்டாயமாக சூடோமோனஸ் அல்லது பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ்  ஒரு ஏக்கருக்கு 1 லிட்டர் தரை வழி மற்றும் 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து தெளித்துவிடவேண்டும் .  அடுத்து பூ எடுக்கும் காலத்திற்கு முந்துன காலத்தில ஜீவாமிர்தம் அதனுடன் கடலை புண்ணாக்கு கரைசல் சேர்ந்து கொடுக்கலாம் அல்லது கடலை புன்னாக்கு கரைசல் மட்டும் கொடுக்கலாம் ஒருவேளை இதை செய்ய முடியவில்லையெனில் பாஸ்போ பாக்...