மாப்பிள்ளை சம்பா
Why should the groom cultivate samba paddy
புகைப்படத்தில் விவசாயி நிற்பது சோளக்கொல்லையிலோ அல்லது கரும்புச்சோலையின் நடுவிலோ அல்ல...
முட்டிக்கால் அளவே நெற்பயிரை பார்த்திருக்கும் நமக்கு ஆறடி உயரத்தில் வளர்ந்து ஆள் நின்றாலும் தெரியாத அளவிற்கு வளர்ந்த நெற்பயிரை பார்ப்பது என்பது நம்ப முடியாத ஆச்சரியமான விசயமாகத்தான் இருக்கும்..
இந்த நெல்லின் பெயர் மாப்பிள்ளை சம்பா.. பெயரை கேட்டதும் இந்த நெல்லின் மகத்துவம் புரிந்திருக்கும்..ஆம் ச டாக்டர்களால் குணப்படுத்த முடியாத குறைபாட்டை இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி குணப்படுத்தும்..
உணவே மருந்து என்று வாழ்ந்த பண்டைய தமிழ் சமூகத்தில் மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, கிச்சிலி சம்பா, பொன்னி, வாசரமுண்டான், என இருபதாயிரத்திற்கும் அதிக நெல் வகைகளை கொண்ட நமது பாரம்பரிய விவசாயம் காலப்போக்கில் அத்தனையும் இழந்து திரு நெல்.ஜெயராமன் அவர்கள் முயற்சியால் இருநூறுக்கும் மேற்பட்ட வகைகளை மீட்டெடுத்தது...
180 நாள் பயிர்
இந்த மாப்பிள்ளை சம்பா 180 நாள் மகசூல் பயிர்..வருடத்திற்கு இரண்டு சாகுபடியே செய்ய முடியும்.90 நாள்களில் அறுவடை ஆகும் அம்பை 16, ஐ ஆர் 8 விதைகளை பயிரிட்டு அறுவடை செய்யும் விவசாயிகள் யாரும் இந்த மாப்பிள்ளை சம்பா பயிரை பயிரிடுவதில்லை.
மாப்பிள்ளை சம்பா அரிசி அதிக படியான புரத சத்து, நார்சத்து, தாது சத்துகளை கொண்ட அரிசி. நார்சத்தை அதிகம் கொண்டதால் நீரழிவு நோயாளிகள் இந்த அரிசியை அதிகம் பயன்படுத்தலாம்.
மாப்பிள்ளை சம்பா அரிசி அதிக படியான புரத சத்து, நார்சத்து, தாது சத்துகளை கொண்ட அரிசி. நார்சத்தை அதிகம் கொண்டதால் நீரழிவு நோயாளிகள் இந்த அரிசியை அதிகம் பயன்படுத்தலாம்.
மாப்பிள்ளை சம்பா |
எதை சாப்பிட்டாலும் ரெண்டு உருண்டை சோறு தின்னால் தான் வயிறு நிறைஞ்ச மாதிரி இருக்கும். கொஞ்சம் சோத்தை போடும்மா... சோத்தை தின்னால் சுகர் அளவு கூடி விடும் அப்புறம் உம்மை நான் தானே பண்டுவம் பார்க்கணும் என சப்பாத்தியை முறைத்து கொண்டு தட்டில் போடும் பொண்டாட்டியின் அக்கறையான பாசத்திற்கு கட்டுப்பட்டு விருப்பமில்லாமல் சப்பாத்தியை சாப்பிடும் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியானது உணவே மருந்து என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லும். அதிகப்படியான கார்போஹைட்ரேட் ரத்தத்தில் ஏறி எகிறும் சர்க்கரை அளவு அதிகரிப்பை தவிர்ப்பதற்காகவும் நார்சத்தை அதிகம் சேர்ப்பதற்காக நீரழிவு நோயாளிகள் ஒரு மடங்கு அரிசியுடன் மூன்று மடங்கு காய்கறிகளை உணவில் எடுத்து கொள்வார்கள்..மாப்பிள்ளை சம்பா அரிசியில் இருக்கும் அதிகபடியான நார்சத்தினால் வழக்கமான சாம்பார் அல்லது மீன்குழம்பை ஊற்றியே சாப்பிடலாம்...
மாப்பிள்ளை சம்பா பெயருக்கான காரணம்
இனி மாப்பிள்ளை சம்பா பெயருக்கான காரணம்..அதிகப்டியான துத்தநாக தாது சத்துகளை கொண்டதால் முன்பு திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்ட இளைஞர்களுக்கு குழந்தையின்றி வாடும் தம்பதிகளுக்கு இந்த அரிசியை உணவாக கொடுத்து பலன் அடைந்திருக்கின்றார்கள்..சாதம் வடித்த தண்ணீரை தூர ஊற்றாமல் அன்னப்பால் என தண்ணீர் தாகத்தின் போது பருக சொல்வார்கள்..முந்தைய நாள் இரவில் மீந்த சாதத்தில் நீரை ஊற்றி காலையில் எழுந்து பல் துலக்கிய பின் கொதிக்கும் டீ ,காபியை சூடாக வெறும் வயிற்றில் குடித்து குடலை கொதிக்க வைக்காமல் குளிர்ந்த நீராகரத்தை பருகுவார்கள்..
முந்தைய தலைமுறை பெரிசுகள் பன்னிரெண்டு முதல் பதினைந்து பிள்ளைகளை அசால்ட்டாக அறுவை சிகிச்சையின்றி பெற்றெடுத்ததிற்கு அவர்களுடைய உணவு பழக்கங்களும் ஒரு காரணமே என்பது மிகையில்லை..
சிட்டுக்குருவி லேகியம், தாதுபுஷ்டி லேகியம் , காயகல்பம் என எதை எதையோ சாப்பிடுவதற்கு பதில் பாரம்பரியமான நமது மாப்பிள்ளை சம்பா அரிசியை அவ்வப்போதாவது பயன்படுத்தி விவசாயிகள் இதனை பயிரிட ஆதரவு அளிக்கலாம் தானே.. பயன்படுத்துவோர் அதிகரிக்கும் போது உற்பத்தி பெருகும் தானே..தற்போது குறிப்பிட்ட சில பெரிய கடைகளில் கிடைக்கிறது..ஒரு கிலோ அரிசியின் விலை 120 ரூபாய் முதல் 160 வரையில் விற்பனையாகிறது.
Comments
Post a Comment