RNR, 45 days paddy can not grow properly What can be done?
RNR , 45 நாள் நெல் சரியான வளர்ச்சி இல்லை என்ன செய்யலாம் வளர்ச்சி குறை மகசூலை பாதிக்குமா அல்லது நாட்களை அதிக பாடுத்துமா
RNR 45 என்பது தெலுங்கானா மாநில நெல் ஆராய்ச்சி நிலையத்தால் கண்டுபிடிக்க பட்டது . தமிழகத்திலும் பரவலாக சில பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது ஒரு ஏக்கருக்கு 2400 கிலோ வரும். சன்னராகம் என்பதைவிட ஒரு அதிகப்படியான கவனிப்பு தேவை உள்ள ரகம். நிறைய இடுபொருட்கள் கொடுக்கவேண்டும்.
சற்று நீளமான கதிர்களை கொண்டுள்ளதால் பயிர் ஓரளவுக்கு சாயும் தன்மை உடையது. எனவே சம்பா வில் பத்து நாட்கள் கழித்து நடவு செய்வதன் மூலம் மழை மற்றும் வெள்ள சேதத்தால் பாதிக்க படுவதை தவிர்க்கலாம் .
குறைந்தபச்சம் ஏதவது ஒரு இடுபொருள் தரைவழி போகவேண்டும் மேலும் பத்து நாட்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு இடுபொருள் தெளிக்கவேண்டும். முக்கியமாக ஒருதடவை மீன் அமிலம் ,பஞ்சகாவியா , ஈ எம் கரைசல் போன்றவற்றை பத்து நாட்களுக்கு ஒருமுறை கொடுக்கவேண்டும் எல்லாவற்றையும் அளவாக கொடுத்தால் வளர்ச்சியும் அளவாக இருக்கும்
நெல் இயற்கை விவசாயம்
Comments
Post a Comment