Skip to main content

இயற்கை முறையில் நெல் பாக்டீரியல் ப்ளாஸ்ட் கட்டுப்படுத்துவது எப்படி

How to control bacterial blast in paddy naturally




நெல்  பாக்டீரியல் ப்ளாஸ்ட்  வரும்முன்  காப்பது 

Precaution rice before bacterial plastids




நோயற்ற பயிரிலிருந்து விதைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.வயல் மற்றும் வரப்புகளில் உள்ள களைகளை அகற்ற வேண்டும்.

நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான ஆடுதுறை 36, ஐ.ஆர்.20 மற்றும் கோ 47 ஆகியவற்றைப் பயிர் செய்தல்.

சூடோமோனாஸ் துகள் கலவை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் 400 மி.லி. தண்ணீரில் கலந்து விதைப்பதால்  பாக்டீரியல் ப்ளாஸ்ட் தாக்குதல் குறைகின்றது.




சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ் பொடியுடன் உலர் விதை நேர்த்தி மேற்கொள்ள வேண்டும். (10 கிராம்/கிலோ விதை)

25 சதுர மீட்டர் பரப்பு உள்ள நாற்றங்காலில் 2.5 செ.மீ ஆழம் வரை நீர் தேக்கி வைக்க வேண்டும். இந்த தேங்கிய நீரில் 2.5 கிலோ சூடோமோனஸ் ஃபுளோரோசன்ஸ் பொடியைத் துாவி நன்கு கலக்க வேண்டும். நாற்றுக்களின் வேர்களை, இதில் 30 நிமிடங்கள் ஊற வைத்து பின் நடவு செய்ய வேண்டும்.

நடவு செய்த 45 நாட்களுக்கு பின் 10 நாட்கள் இடைவெளியில் சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ் பொடியை 0.5% என்ற அளவில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.




 நெல்  பாக்டீரியல் ப்ளாஸ்ட் தென்பட்டால் 

பேசில்லஸ் சப்ஸ்டில்ஸ் பத்து லிட்டருக்கு 50 மில்லி திரவமாக இருந்தால் பவுடராக இருந்தால் 100 கிராம் கலந்து இலையோட முன்னும் பின்னும் செடிகளோட எல்லாபாகமும் நனையும் அமைப்புல தெளிச்சு விடணும் 

தரை வழியிலும் ஒரு லிட்டரா வரப்பு வழி அல்லது தண்ணியில உள் பக்கமா போர அமைப்புல கிழேயும் கொடுக்கவேண்டும்  இத ஒருதடவை செஞ்சா கண்டிப்பா ஆறாவதுநாள் மற்றும் 12வது  நாள் மறுபடியும் செய்யவேண்டும் 

Comments

  1. Since stereolithography parts have a smoother surface than our other applied sciences, SLA parts are probably the most delicate to faceting. Viewing the STL at precise dimension gives a great indication of whether facets might be visible on the final half. If fantastic feature decision is crucial, zooming in to check faceting in those high precision machining areas is helpful. Angle tolerances is the export setting that refers to the to the} course a triangle faces compared to with} the triangles around it. The smaller the angle value, the smoother the transition between triangles. This setting is vital for having the right decision on fantastic options.

    ReplyDelete

Post a Comment

Popular Posts

நெல் பயிரும் பட்டங்களும்

பாரம்பரிய நெல் ரகங்களுக்கு பட்டங்கள் : குறுகிய கால ரகங்கள்(60 முதல் 120 நாட்கள்) அறுபதாம் குறுவை,  பூங்கார்,  கருங்குறுவை,  குழியடிச்சான்,  கார்,  சிங்கினிகார்,  அன்ன மழகி,  உவர்முன்டா,  குள்ளங்கார் போன்ற குறுவைப் பட்டத்துக்கு ஏற்றவை.  மத்தியகால ரகங்கள்(130 முதல் 140 நாட்கள்), தூயமல்லி, இலுப்பைப்பூ சம்பா, சீரகச் சம்பா, வாசனை சீரகச் சம்பா, தேங்காய்ப்பூ சம்பா, கவுனி, சிகப்புக் கவுனி, சேலம் சன்னா, சம்பா மோசனம், குடவாழை போன்ற சம்பா பட்டத்துக்கு ஏற்றவை.  நீண்டகால ரகங்கள்  (140 முதல் 200 நாட்கள்) மாப்பிள்ளைச் சம்பா, காட்டுயானம், ஒட்டடையான், கருடன் சம்பா, தங்கச் சம்பா, நீலஞ்சம்பா, வாடன் சம்பா  ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையான காலத்துக்கு ஏற்றவை  தமிழ்நாட்டில் எந்தெந்தப் பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது? ”நவரை, சொர்ணவாரி, கார், குருவை, முன் சம்பா, சம்பா, பின் சம்பா, தாளடி” ஆகிய பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். நவரைப் பட்டம்! : * டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலம், நவ...

நெல் சாகுபடி உர நிர்வாகம்- நெல் நாற்று நடவு நட்டு 20 நாட்கள் ஆகிறது என்ன இயற்கை இடு பொருட்கள் கொடுக்கலாம்

நெல் சாகுபடி உர நிர்வாகம் Oraganic-Fertilizer-Management-in-Paddy-Cultivation முதலில் 15வது  நாலும் 30வது நாளும் களை எடுப்பது முக்கியம் . களை எடுத்த அன்றே ஜீவாமிர்தம் அல்லது மீன் அமிலம் கொடுக்க வேண்டும் ஒரு ஏக்கருக்கு ஜீவாமிர்தம் என்றால் 200 லிட்டரும் மீன் அமிலமாக இருந்தால் ஏக்கருக்கு ஒரு லிட்டரும் கொடுக்கலாம் . வாரம் ஒரு முறை அல்லது 5 நாட்களுக்கு ஒரு முறை மீன் அமிலம் , பஞ்சகவ்வியா , ஜீவாமிர்தம் அல்லது இ எம் கரைசல் ஏதாவது ஒன்றை தரைவழி கொடுக்கலாம் . நல்ல வழிப்பான இலை அதே சமயம் பஞ்சகவ்வியா, இ எம் கரைசல் ஏதாவது ஒன்றை 15 நாள்களுக்கு ஒரு முறை தெளிப்பது நல்ல பலன்களை கொடுக்கும் . முதல் 60 நாட்களில் வளர்வதுதான் வளர்ச்சி , அதிகமான தூர் எடுப்பதும் நல்ல வழிப்பான இலைகளும் ஒரு அமைப்பான நெல்லையும் கொண்டுவர வேண்டும் படத்தில் இருப்பது போல் கிளி பச்சை நிறத்திலிருந்து கரும்பச்சை நிறத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் 

நெல் அதிகம் வேர் பிடிக்க என்ன செய்யலாம்

What can be done to root more paddy   நெல் அதிகம் விளைச்சல் பெற நாம் முக்கியமாக பார்த்துக்கொள்ள வேண்டியது பயிரில் வேர் அதிகம் வளர்வதுபோல் பார்த்து கொள்ளவேண்டும் , வேர் அதிகம் இருந்தாலே பயிர் நன்றாக இருக்கும் . வேர் நன்றாக வளர வேண்டுமென்றால் பயிர் சரியாக இருக்கவேண்டும் அதற்கு அடியுரம் தேவை . அடுத்து நட்டு சரியான நாட்களில் களையெடுப்பது முக்கியம் கையாலோ அல்லது கோனோ வீடர் போட்டோ எடுப்பது முக்கியம் வேரோடு எடுத்து விட்டாலே நெல்லுக்கு வேர் பரவுவதற்கு இடம் கிடைக்கும்.  களை எடுத்த அன்றோ அல்லது அதற்கு மறு நாளோ தேவையான இடு பொருட்கள் கொடுக்கவேண்டும் , அப்படி கொடுத்தாலே அந்த இடத்திலிருந்து நன்றாக இருக்கும் அடுத்து மாதம் ஒரு முறை கட்டாயமாக சூடோமோனஸ் அல்லது பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ்  ஒரு ஏக்கருக்கு 1 லிட்டர் தரை வழி மற்றும் 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து தெளித்துவிடவேண்டும் .  அடுத்து பூ எடுக்கும் காலத்திற்கு முந்துன காலத்தில ஜீவாமிர்தம் அதனுடன் கடலை புண்ணாக்கு கரைசல் சேர்ந்து கொடுக்கலாம் அல்லது கடலை புன்னாக்கு கரைசல் மட்டும் கொடுக்கலாம் ஒருவேளை இதை செய்ய முடியவில்லையெனில் பாஸ்போ பாக்...