Skip to main content

ஆடுதுறை 39 ரகம் விவசாயிகள் கல்சர் நெல்

 



மதுரை பகுதியில் ஆடுதுறை 39: ஆடுதுறை 39 ரகம் விவசாயிகள் கல்சர் நெல் என்று சொல்வார்கள். மதுரை பகுதியில் ஆடுதுறை 39 ரகம் இரண்டாவது பயிராக சாகுபடி செய்தபோது ஆடுதுறை 43 மற்றும் 45 ரகத்தைவிட அதிக மகசூலினைக் கொடுக்கின்றது. இந்த ரகம் ஐ.ஆர்.8 மற்றும் ஐ.ஆர்.20 ரகங்களை கருவொட்டு செய்து உருவாக்கப்பட்டது. மழை, பனி, குளிர் பட்டங்களில் பூஞ்சாள நோய்களால் பாதிக்கப் படுவதில்லை.


 தஞ்சை தாளடியில் ஆடுதுறை 39: தஞ்சை மற்றும் நாகை மாவட்டங்களில் தாளடி பட்டதில் ஆடுதுறை 39 ரகம் மிக சிறப்பாக சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. மேலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையிலும் நல்ல மகசூலினைக் கொடுக்கின்றது. மணல்பாங்கான நிலத்திற்கும் ஏற்றதாக உள்ளது. வயதான நாற்றினை நடவேண்டிய நிர்ப்பந்தத்திலும் மகசூல் பாதிக்கப்படுவதில்லை. ஆடுதுறை 39 ரகத்தில் எலிவெட்டு பாதிப்பு மிகவும் குறைவு. மற்றும் அறுவடை சமயம் பயிர் கீழே சாய்வதில்லை.



புழுதிக்கால் சாகுபடியில் ஆடுதுறை 39: தமிழகத்தில் மிக அதிக பரப்பளவில் புழுதிக்கால் சாகுபடி செய்யும் மாவட்டம் காஞ்சிபுரம். வடகிழக்குப் பருவமழை உதவியினால் இந்த சாகுபடி பல வருடங்களாக தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றது. ஆவணியில் நிலத்தை உழுது நன்கு மக்கிய எருக்களை இட்டபிறகு நீரில் ஊறப்போடாத விதைகள் ஏர்சாலிலோ, கொருகலப்பை உபயோகித்தோ விதைக்கப்படும். முளைத்த பயிர் சுமார் இரண்டு மாதங்கள் மானாவாரி பயிர்போல் வளர்ந்து வரும். பின் ஐப்பசி மழையில் ஏரிகள் நிரம்பிய உடன் பாசனப் பயிராக மாறிவிடும். இந்தமுறை சாகுபடிக்கு ஆடுதுறை 39 ரகம் சிறப்பாக உள்ளது. விதை விதைத்த 135ம் நாளில் அறுவடைக்கு வரும். 1.5 ஏக்கரில் 45 மூடை மகசூல் இந்த ரகம் கொடுத்துள்ளது. வைக்கோல் விற்பனையிலும் வருவாய் உண்டு. பல விவசாயிகளால் இன்றும் பாராட்டப் படுவது ஆடுதுறை 39 ரகமாகும்.


கிருஷ்ணகிரி பகுதியில் ஆடுதுறை 39: கிருஷ்ணகிரி பகுதியில் தோட்டக்கால் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. இங்கு அதிக அளவில் சாகுபடிக்கு உதவுவது கிணற்றுப் பாசனம்தான். இங்கு விவசாயம் எருது மாடுகள் வைத்து செய்யப்படுகின்றது. மேலும் கறவை மாடுகளும் உள்ளன. இவைகளுக்கு வைக்கோல் தேவைப்படுகின்றது. தோட்டக்கால் நிலையில் மா சாகுபடி செய்தாலும் நெல் சாகுபடியும் சிறப்பாக செய்யப்படுகின்றது. நெல் சாகுபடியில் வியாபார பிரச்னையே கிடையாது. பல விவசாயிகள் இரண்டாம் பயிராக ஆடுதுறை 39 ரகத்தை மழை, பனி, குளிர் இருக்கும் பட்டத்தில் சாகுபடி செய்கிறார்கள். இங்கு விவசாயி விருபாக்ஷன் நெல் சாகுபடி தொடர்ந்து செய்துவருகிறார். மழை வந்தாலும் பயிர் பொதுவாக பாதிப்படைவது இல்லை. பூச்சி, பூஞ்சாள நோய் இல்லை. இங்கு விவசாயிகளுக்கு பாசன நீர் கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தில்இருந்தும் கிடைக்கின்றது. சமீபத்தில் இவர் அறுவடை செய்த ஆடுதுறை 39 ரகம் மழையால் பாதிப்பில்லாமல் வந்தது. இருப்பினும் நெல் மகசூல் பாதிக்கப்பட்டு இதனால் நஷ்டம் வருமோ என்று பயந்தபோது அறுவடைக்குப் பின் விவசாயிக்கு ஏமாற்றம் மறைந்து சந்தோஷம் ஏற்பட்டது.



சாதாரணமாக ஒரு ஏக்கர் வைக்கோலில் வரவு ரூ.4,000. 3.88 ஏக்கர் வைக்கோலில் வரவு சுமார் ரூ.16,000. தற்போது ஒரு ஏக்கரில் வரவு ரூ.10,820 (அல்லது) ரூ.11,000. 3.88 ஏக்கரில் தற்போது வரவு ரூ.42,000. விவசாயிக்கு தற்போது சாதாரண முறையைவிட சுமார் இரண்டரை மடங்கு அதிக வருவாய் வைக்கோலில் கிடைத்துள்ளது.

Comments

Popular Posts

நெல் பயிரும் பட்டங்களும்

பாரம்பரிய நெல் ரகங்களுக்கு பட்டங்கள் : குறுகிய கால ரகங்கள்(60 முதல் 120 நாட்கள்) அறுபதாம் குறுவை,  பூங்கார்,  கருங்குறுவை,  குழியடிச்சான்,  கார்,  சிங்கினிகார்,  அன்ன மழகி,  உவர்முன்டா,  குள்ளங்கார் போன்ற குறுவைப் பட்டத்துக்கு ஏற்றவை.  மத்தியகால ரகங்கள்(130 முதல் 140 நாட்கள்), தூயமல்லி, இலுப்பைப்பூ சம்பா, சீரகச் சம்பா, வாசனை சீரகச் சம்பா, தேங்காய்ப்பூ சம்பா, கவுனி, சிகப்புக் கவுனி, சேலம் சன்னா, சம்பா மோசனம், குடவாழை போன்ற சம்பா பட்டத்துக்கு ஏற்றவை.  நீண்டகால ரகங்கள்  (140 முதல் 200 நாட்கள்) மாப்பிள்ளைச் சம்பா, காட்டுயானம், ஒட்டடையான், கருடன் சம்பா, தங்கச் சம்பா, நீலஞ்சம்பா, வாடன் சம்பா  ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையான காலத்துக்கு ஏற்றவை  தமிழ்நாட்டில் எந்தெந்தப் பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது? ”நவரை, சொர்ணவாரி, கார், குருவை, முன் சம்பா, சம்பா, பின் சம்பா, தாளடி” ஆகிய பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். நவரைப் பட்டம்! : * டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலம், நவரைப் பட்டம். இப்பட்டத்துக்கு 120 நாட்களுக்குக் குறைவான வயது கொண்

நெல் சாகுபடியில் உயிர் உரங்களின் முக்கியத்துவம்

Importance of bio-fertilizers in paddy cultivation அடி உரம் கொடுக்க முடியாத இடங்களில் அல்லது அடி உரமா தொழு உரங்கள் கிடைக்காத இடங்களில் இந்த உயிர் உரங்களை அடி உரமா பயன்படுத்தலாம். குறிப்பா , சம்பா பயிர் செய்யும் நேரங்களில் வேண்டிய அளவு தொழு உரங்கள் கிடைப்பதில்லை, ஆனால்  அந்த மாதிரி நேரங்களில் அரசாங்கமே 4 டிராக்டர் தொழு உரம் போடணும் சொல்கிறது . ஒரு ஏக்கருக்கே 4 லோடு என்றால் மொத்த பரப்பளவிற்கு கிடைப்பது சிரமம் அப்படி கிடைத்தாலும் தொழு உரத்தின் விலை அதிகமாகி போய்க்கொண்டிருக்குகிறது  பல பகுதிகளில் 3000 தாண்டி டிராக்டர் லோடு விற்கிறது . அதுவே மானியத்தில் உயிர் உரங்கள் வாங்கினால் 1 கிலோ 30 ரூபாய் கிடைக்கும்  10 கிலோவாக வாங்கினாலும் 300 ரூபாய்தான் வரும் மூவாயிரம் எங்கே இருக்கிறது 300 எங்கே இருக்கிறது ஆகவே தேவையான அளவு வாங்கி அடி உரமாக இடலாம் . அடி உரத்தில் உயிர் உரங்கள்  அசோஸ் பயிரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா கொடுக்கலாம் இது இரண்டும் கொடுப்பது நல்லது இதை தவிர்த்து 60வது நாள் நெல் பயிர் பூக்கிறது என்றால் 30 வது நாள் பயிர் வளரக்கூடிய நேரத்திலும் 60 வது நாள் பூக்கும் சமயத்திலும் பூத்து முடித்

நெல் அதிகம் வேர் பிடிக்க என்ன செய்யலாம்

What can be done to root more paddy   நெல் அதிகம் விளைச்சல் பெற நாம் முக்கியமாக பார்த்துக்கொள்ள வேண்டியது பயிரில் வேர் அதிகம் வளர்வதுபோல் பார்த்து கொள்ளவேண்டும் , வேர் அதிகம் இருந்தாலே பயிர் நன்றாக இருக்கும் . வேர் நன்றாக வளர வேண்டுமென்றால் பயிர் சரியாக இருக்கவேண்டும் அதற்கு அடியுரம் தேவை . அடுத்து நட்டு சரியான நாட்களில் களையெடுப்பது முக்கியம் கையாலோ அல்லது கோனோ வீடர் போட்டோ எடுப்பது முக்கியம் வேரோடு எடுத்து விட்டாலே நெல்லுக்கு வேர் பரவுவதற்கு இடம் கிடைக்கும்.  களை எடுத்த அன்றோ அல்லது அதற்கு மறு நாளோ தேவையான இடு பொருட்கள் கொடுக்கவேண்டும் , அப்படி கொடுத்தாலே அந்த இடத்திலிருந்து நன்றாக இருக்கும் அடுத்து மாதம் ஒரு முறை கட்டாயமாக சூடோமோனஸ் அல்லது பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ்  ஒரு ஏக்கருக்கு 1 லிட்டர் தரை வழி மற்றும் 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து தெளித்துவிடவேண்டும் .  அடுத்து பூ எடுக்கும் காலத்திற்கு முந்துன காலத்தில ஜீவாமிர்தம் அதனுடன் கடலை புண்ணாக்கு கரைசல் சேர்ந்து கொடுக்கலாம் அல்லது கடலை புன்னாக்கு கரைசல் மட்டும் கொடுக்கலாம் ஒருவேளை இதை செய்ய முடியவில்லையெனில் பாஸ்போ பாக்டீரியா ஒரு ஏக்கருக்