நெற்பயிருக்கு உயிரியல் முறை நோய்க்கட்டுப்பாட்டில் பேசில்லஸ் சப்டில்லிஸ்
பேசில்லஸ் சப்டில்லிஸ் என்பது மண்ணில் வாழும் ஒரு பேக்டீரியம் ஆகும். இது பயிரில் தோன்றும் நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும், பயிர் வளர்ச்சியை தூண்டுவதிலும் முக்கிய பங்கு வகுக்கிறது. இப்பாக்டடீரியம் புற அமைப்பில் பழுப்பு நிறத்தில் காணப்படும். இது கடினமான புறத்தோலையுடைய என்டோஸ் போரை உற்பத்தி செய்வதால், வறண்ட சூழ்நிலையையும் தாங்கி வளரக்கூடியது. இப்பேசில்லஸ் சப் டில்லிஸ் நுண்ணுயிரானது சூடோமோனாஸ் ஃபுளூரோசன்ஸை விட பயிர்களுக்கு அதிக பாதுகாப்பளி ப்பதால் இதனை சூடோமோனாஸ்க்கு மாற்றாக பயன்படுத்தலாம்.
நெல்லில் பயன்படுத்தும் முறை
ஈரவிதைநேர்த்தி
300 கிராம் பேசில்லஸ் சப்டில்லிஸை (பிபிபி 57) 30 லிட்டர் தண்ணீரில் நன்கு கரைத்து ஒரு ஏக்கர் சாகுபடிக்ககுரிய 30 கிலோ விதை நெல்லை இக்கரைசலினுள் 18 மணி நேரம் உறவைத்து, பின் கரைசலை வடித்து 12 மணி நேரம் கழித்து விதையினை மூட்டமிட்டு மாலையில் நாற்றங்காலில் விதையினை விதைக்கவும்.
நெல் நாற்றின் வேர்களை நனைத்தல்
நாற்றுப்பறியின் போது 10 சதுர மீட்டர் நாற்றங்களிலோ அல்லது பிளாஷ்டிக் டப்புகளிலோ (Plastic Tub) ஒரு கிலோ பேசில்லஸ் சப்டில்லிஸை கரைத்து அக்கரைசலில் பறித்த நாற்றுகளின் வேர்கள் நன்கு நனையும்படி 20 நிமிடம் உறவைத்து பின்பு நடவு வயலில் நடவும்.
நேரடியாக வயலில் இடுதல்
நடவு நட்ட 30ம் நாள் ஒரு கிலோ பேசில்லஸ் சப்டில்லிஸை 20 கிலோ நன்கு மக்கிய தொழு எருவுடன் கலந்து 1 ஏக்கர் பரப்பளவு வயலில் சீராக தூவ வேண்டும்.
தெளிப்பு முறை
முதல் முறை தெளிப்பு
நடவு நட்ட 45ம் நாள் ஒரு ஏக்கருக்கு 90 லிட்டர் நீரில் 450 கிராம் பேசில்லஸ் சப்டில்லிஸை கரைத்து (1 மாவிற்கு 3 டேன்க் அதாவது 30 லிட்டர் நீர் + 150 கிராம் பிபிவி 57) நெற்பயிர் முழுவதும் நன்கு நனையும் படி குளிப்பாட்டவும்.
2ம் முறை தெளிப்பு
நெற்பயிர் தண்டு உருளும் பொழுது 90 லிட்டர் நீரில் 450 கிராம் பேசில்லஸ் சப்டில்லிஸை கரைத்து பயிர் நன்கு நனையும் படி தெளிக்கவும்.
பேசில்லிஸ் சப்டில்லிஸ் சிறப்புகள்
1) இதனை சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ்க்கு மாற்றாக பயன்படுத்தலாம்.
2) இப்பேக்டீரியம் உயிர் எதிர்பொருளை சுரப்பதுடன், நைட்ரஜன் என்ற தாதுப்பொருளை நிலைநிறுத்துவதால், நெற்பயிரின் நோயைக் கட்டுப்படுத்துகிறது.
3) இப்பேக்டீரியம் தாவரத்தினுள் வாழும் தன்மையுடையதால் மண்ணில் வாழும் பூஞ்சாணக் காரணிகளை நன்றாக கட்டுப்படுதும்.
குறிப்பு:
1) இந்த பாக்டீரியா கலவையை தயாரித்த 6 மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
2) இதனை அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டிரியா போன்ற அனைத்து உயிர் உரங்களுடன் கலந்து வயலில் இடலாம்.
3) இதனை பூஞ்சான மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் கலத்தல் கூடாது.
Comments
Post a Comment