Paddy Brown Spot Organic control Method
இது ஒரு பூசண நோயாகும் நாற்றங்கால் முதல் நெல் பால் பிடிக்கும் வரை இந்தநோயின் தாக்கம் இருக்கும் அல்லது பயிரை தாக்கும் . நெல் தாளில் சிறு சிறு பழுப்பு நிற புள்ளிகளாக தோன்றி வட்டவடிவமாக மாறும் அந்த வட்டவடிவங்கள் ஓன்று சேர்ந்து பெரிய திட்டுகளாக மாறி இலைகள் காய்ந்துவிடும் . மேலும் நெல்லின் தரம் பாதிக்கப்படும் முளைப்பு திறன் பாதிக்கப்படும். இந்த நெல் செம்புள்ளி நோய் தீவிரமாக மாறினால் கிட்டத்தட்ட 50 சதவீத மகசூல் பாதிக்கப்படலாம் .
நெல் செம்புள்ளி நோய் எப்படி பரவலாம்
உங்கள் வயல்களில் உள்ள கலைச்செடி மூலம் பரவலாம் . நெல் விதைகள் மூலம் பரவலாம் நெல் விதைகளில் 4 வருடம் வரை இந்த பூஞ்சாணம் உயிருடன் இருக்கக்கூடியது . 80 % மேல் ஈரப்பதம் தொடர்ந்து இருந்தால் பரவும் , தலை சத்து அதிகமாக இருந்தாலும் பரவும்
நெல் செம்புள்ளி நோய் எப்படி தடுக்கலாம்
நோயற்ற விதைகளை பயன்படுத்தலாம் . விதைப்பதற்கு முன் விதை நேர்த்திசெய்யலாம் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸை விதை நேர்த்தி செய்யலாம் பின்பு நாற்றங்காலில் தூவலாம் . ஹெக்ட்டருக்கு 100 லிட்டர் தண்ணீரில் 2.5 கிலோ சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸை கலந்து , ஒரு அரை மணி நேரம் ஊறவைத்து நடலாம் . கலைச்செடிகள் மற்றும் மாற்று செடிகள் வரப்பு ஓரத்தில் உள்ள செடிகளை அளிக்கவேண்டும் .
ஏடீடி 44, பீஒய் 4, கோஆர்ஹச் 1, கோ 44, காவேரி பவானி, டிபிஎஸ் 4 மற்றும் தனு போன்ற செம்புள்ளி நோய் எதிர்ப்பு கொண்ட ரகங்களை நடலாம் . பயிர் வளர்ச்சிக்கு தேவையான உரங்களை இடலாம் . மழை தொடர்ந்து பெய்தால் , நோய் அறிகுறி தென்பட்டால் பேசில்ஸ் சப்ஸ்டில்ஸ தெளிக்கலாம் தெளித்த 7 வது நாள் மறுபடியும் தெளிக்கவேண்டும் .
Comments
Post a Comment