நெற்பயிருக்கு உயிரியல் முறை நோய்க்கட்டுப்பாட்டில் பேசில்லஸ் சப்டில்லிஸ் பேசில்லஸ் சப்டில்லிஸ் என்பது மண்ணில் வாழும் ஒரு பேக்டீரியம் ஆகும். இது பயிரில் தோன்றும் நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும், பயிர் வளர்ச்சியை தூண்டுவதிலும் முக்கிய பங்கு வகுக்கிறது. இப்பாக்டடீரியம் புற அமைப்பில் பழுப்பு நிறத்தில் காணப்படும். இது கடினமான புறத்தோலையுடைய என்டோஸ் போரை உற்பத்தி செய்வதால், வறண்ட சூழ்நிலையையும் தாங்கி வளரக்கூடியது. இப்பேசில்லஸ் சப் டில்லிஸ் நுண்ணுயிரானது சூடோமோனாஸ் ஃபுளூரோசன்ஸை விட பயிர்களுக்கு அதிக பாதுகாப்பளி ப்பதால் இதனை சூடோமோனாஸ்க்கு மாற்றாக பயன்படுத்தலாம். நெல்லில் பயன்படுத்தும் முறை Click Image ஈரவிதைநேர்த்தி 300 கிராம் பேசில்லஸ் சப்டில்லிஸை (பிபிபி 57) 30 லிட்டர் தண்ணீரில் நன்கு கரைத்து ஒரு ஏக்கர் சாகுபடிக்ககுரிய 30 கிலோ விதை நெல்லை இக்கரைசலினுள் 18 மணி நேரம் உறவைத்து, பின் கரைசலை வடித்து 12 மணி நேரம் கழித்து விதையினை மூட்டமிட்டு மாலையில் நாற்றங்காலில் விதையினை விதைக்கவும். நெல் நாற்றின் வேர்களை ...
அனைத்து வித நெல் சாகுபடி மேலாண்மை மற்றும் இயற்கை முறை பூச்சி நோய் கட்டுப்பாடு , நெல் வகைகள் மற்றும் இயற்கை உர மேலாண்மை