Skip to main content

Posts

இலுப்பை பூ சம்பா கதிர் பரியவில்லை மற்றும் குருத்து புழு , கரையான் கட்டுப்பாடு

  Paddy nematode, termite control and Boron Management    இலுப்பை பூ சம்பா இலுப்பை பூ சம்பா 85 நாள் பயிர். ஒரு தூரில் உள்ள 3-4 நாற்றுகள் மட்டுமே கதிர் பரிந்துள்ளது. மற்ற 16-20 நாற்றுகளில் கதிர் பரியவில்லை. அனைத்து தூர்களில் இவ்வாறு உள்ளது  வேப்பெண்ணை கரைசல்  இருந்தால் 10 லிட்டருக்கு 30 மில்லி வேப்பெண்ணை கலந்து நன்றாக கரைத்துவிட்டு தெளிக்கலாம் . பெவேரியா பேசியான  10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து தெளிக்கவேண்டும் இது இரண்டையும் 6 வது  நாள் மறுபடியும் தெளிக்கவேண்டும் . பின்பு பயிருக்கு தேவையான இடுபொருட்கள் சரியா கிடைக்கிற மாதிரி கொடுப்பது நல்லது . போரான் இதனுடன் நுன்னூட்ட சத்துக்கள் போரான்  கொடுக்கவேண்டும் . போரான் சத்துக்கு எருக்கு கரைசல் கொடுக்கலாம் அல்லது போராக்ஸ் பவுடர் வாங்கி சாணத்துடன் கலந்து வேரில் படுவதுபோல் கொடுக்கலாம்  குருத்து புழு  நெல்லில் குருத்து புழு அழுகளுக்கு பேவெறியா பேசியானா , பேசில்லஸ் துரிஞ்சயன்சிஸ் பத்து லிட்டருக்கு 50 மில்லி கலந்து இழையோட முன்னும் பின்னும் படுவதுபோல் ,முக்கியமாக குருத்துகளில் படுவதுமாதிரி தெளிக்கவேண்டும் . ஒருதடவை தெளித்தால் பத்தாவது நாள் தெளிக்க வேண

Cr நெல் குருத்து பூச்சி கட்டுப்பாடு மற்றும் BPT நெல் பயிர் பாதுகாப்பு முறைகள்

   Cr Paddy Pest Control and BPT paddy Crop Protection Methods பயிர் PPT நெல்  60  நாள் ஆகிறது. பயிர் பாதுகாப்பு என்ன செய்யலாம்.  நெல் பயிரில் அதிகமான பிரச்சனைகள் எங்கிருந்து வரும்மென்றால் அது புழுக்களால்தான் , புழு வராமல் இருக்க தடுப்பு முறைகள் செய்யவேண்டும்  அதில் முக்கியமானது வேப்பெண்ணை கரைசல் , பொன்னீம் கரைசல் , அக்னீ அஸ்த்திரம் , ஜீவாமிர்தம்  , கற்பூரக்கரைசல் இந்த நான்கு  பொருட்களில் ஏதாவது ஒன்றை தொடர்ச்சியாக எல்லா  கலக்கட்டத்திலையும் அதாவது பயிர் முற்றி மஞ்சளாகுர  காலம் வரை  எட்டுநாளைக்கு அல்லது பத்து நாளைக்கு ஒரு முறை தெளிப்பதால் நிறைய பலன்கள் இருக்கும் முக்கியமாக வெள்ளை பூச்சி வந்து புழு வராமல் இருப்பதற்க்கு ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும். அடுத்ததாக பூ வந்து பால் கதிர் வருது, பால் கதிர் வரும்பொழுது உறுஞ்சாமல் இருப்பதற்க்கு இந்த திரவங்களைபயன்படுத்துவதால் நல்ல பலன்கள் தரும்  நெல் மணிகளில் நோய்கள் வராமல் இருப்பதற்க்கும் இதை பயன்படுத்தலாம் BPT நெல் ரகத்தில் குலை நோய் தாக்குவதற்க்கு அதிக வாய்ப்பு , முன் எச்சரிக்கையாக   தெளிப்பது நல்லது . இல்லையென்றால் பெவேரிய பேசியானா , பேசில்ஸ் சப்ஸ

இயற்கை முறையில் பூங்கார் நெல் சாகுபடி

 Poonkar paddy cultivation in a Organic way பூங்கார் நெல்  இது ஒரு எழுபது முதல் என்பது நாள் வயது கொண்ட  குறுகிய கால நெல் பயிராகும் . எல்லா பருவத்திற்க்கும் ஏற்ற ரகமாகும் . அதிக வெள்ளம் உள்ள சமயங்களிலும் அல்லது வரட்சி உள்ள நேரத்திலும் நன்கு தாங்கி வளரக்கூடிய ரகமாகவும், கதிர் அறுவடை சமயத்தில் மழை  பெய்தால் கூட நாப்பது நாட்கள் விதை உறக்கத்திற்கு பின்பே முளைக்கும் , நேர் கதிர்கள் நீருக்குள் மூழ்கி இருந்தாலும் முளைக்காது . முன்னாளில் இதனை "அறுபதாம் கொடை" என்று அழைக்கப்பட்டது நோய் எதிர்ப்பு கொண்ட ரகமாகவும் அதிக மகசூல் தரக்கூடியது .  இட்லி  மற்றும் தோசை செய்வதற்க்கு சிறந்த ரகமாகும் மேலும் இதன் தவிடு சுவையானதாக இருக்கும். மருத்துவ குணம்  பூங்கார் அரிசியை  தொடர்ந்து சாப்பிடுவதால் உடலுக்கு அதிக வலிமை கிடைக்கிறது ஒரு இயலப்பான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும், கர்ப்பிணி பெண்களுக்கு இயல்பான பிரசவம் நடைபெறும் . நாற்றங்கால் தயாரிப்பு  தமிழ்நாட்டில் எல்ல மாவட்டங்களில் உள்ள மண் வகைகளுக்கு ஏற்றது இந்த பூங்கார் ரகம் ஆண்டுக்கு மும்முறை சாகுபடி செய்யலாம்.  அனைத்து பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம் எ

நெல் பயிர் மேலாண்மை மற்றும் நெல் பயிரில் சாம்பல் சத்து குறைபாடு எப்படி நிவர்த்தி செய்யலாம்

How to address potash  deficiency in paddy crop   பெரும்பாலும் நெற்பயிர்கள் நடவு செய்த, 40 முதல், 70 நாட்களில், இதற்கான அறிகுறிகள் தென்படும். இலைகள் கரும்பச்சை நிறத்தில் காணப்படும், வேர்களின் வளர்ச்சி குன்றி  அதிக தூர்கள் இன்றி காணப்படும் பெரிய இலைகளிலிருந்து சிறிய இலைகளுக்கு பரவும் இதனால் மகசூல் பாதிக்கப்படும்    ஜீவாமிர்தம் மற்றும் கடலை புண்ணாக்கு கரைசல்  15 நாட்களுக்கு ஒரு முறை தரை வழி கொடுக்கலாம். பாஸ்போ பாக்டீரியா மற்றும் பொட்டாஷ் பாக்டீரியா இது இரண்டையும் ஒரு ஏக்கருக்கு 2 லிட்டர் பாஸ்ப்போ பாக்டீரியா ஒரு லிட்டர் பொட்டாஷ் பாக்டீரியா பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து தரைவழி கொடுக்கலாம் இதை சாம்பல் அது குறைபாடு தென்பட்டால் உடனடியாக கொடுக்கவேண்டும். படத்தில் உள்ளது போல் செடியோட அமைப்பும் துரோட அமைப்பும் இன்னும் நன்றாக வரவேண்டும் அதற்கு ஜிவாமிர்தமும் மீன் அமிலமும் கொடுக்கவேண்டும் 10 நாட்களுக்கு ஒருமுறை தரைவழியும் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும் செய்யலாம்  உங்கள் நிலங்களில் நீர் உப்பாக இருந்தால் அல்லது சப்பை தன்னீராக இருந்தால் இ .எம் கரைசல் அதிகமாக பயன்படுத்துங்கள் ஒரு ஏக்கருக்கு ஒரு லி

நெல் சாகுபடி உர நிர்வாகம்- நெல் நாற்று நடவு நட்டு 20 நாட்கள் ஆகிறது என்ன இயற்கை இடு பொருட்கள் கொடுக்கலாம்

நெல் சாகுபடி உர நிர்வாகம் Oraganic-Fertilizer-Management-in-Paddy-Cultivation முதலில் 15வது  நாலும் 30வது நாளும் களை எடுப்பது முக்கியம் . களை எடுத்த அன்றே ஜீவாமிர்தம் அல்லது மீன் அமிலம் கொடுக்க வேண்டும் ஒரு ஏக்கருக்கு ஜீவாமிர்தம் என்றால் 200 லிட்டரும் மீன் அமிலமாக இருந்தால் ஏக்கருக்கு ஒரு லிட்டரும் கொடுக்கலாம் . வாரம் ஒரு முறை அல்லது 5 நாட்களுக்கு ஒரு முறை மீன் அமிலம் , பஞ்சகவ்வியா , ஜீவாமிர்தம் அல்லது இ எம் கரைசல் ஏதாவது ஒன்றை தரைவழி கொடுக்கலாம் . நல்ல வழிப்பான இலை அதே சமயம் பஞ்சகவ்வியா, இ எம் கரைசல் ஏதாவது ஒன்றை 15 நாள்களுக்கு ஒரு முறை தெளிப்பது நல்ல பலன்களை கொடுக்கும் . முதல் 60 நாட்களில் வளர்வதுதான் வளர்ச்சி , அதிகமான தூர் எடுப்பதும் நல்ல வழிப்பான இலைகளும் ஒரு அமைப்பான நெல்லையும் கொண்டுவர வேண்டும் படத்தில் இருப்பது போல் கிளி பச்சை நிறத்திலிருந்து கரும்பச்சை நிறத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் 

ஏன் மாப்பிள்ளை சம்பா நெல் பயிரிட வேண்டும்

 மாப்பிள்ளை சம்பா Why should the groom cultivate samba paddy மாப்பிள்ளை சம்பா நெல் புகைப்படத்தில் விவசாயி நிற்பது சோளக்கொல்லையிலோ அல்லது கரும்புச்சோலையின் நடுவிலோ அல்ல... மாப்பிள்ளை சம்பா  நெற்பயிர்களின் நடுவில் தான் நிற்கிறார்... முட்டிக்கால் அளவே நெற்பயிரை பார்த்திருக்கும் நமக்கு ஆறடி உயரத்தில் வளர்ந்து ஆள் நின்றாலும் தெரியாத அளவிற்கு வளர்ந்த நெற்பயிரை பார்ப்பது என்பது  நம்ப முடியாத ஆச்சரியமான விசயமாகத்தான் இருக்கும்.. இந்த நெல்லின் பெயர் மாப்பிள்ளை சம்பா.. பெயரை கேட்டதும் இந்த நெல்லின் மகத்துவம் புரிந்திருக்கும்..ஆம் ச டாக்டர்களால் குணப்படுத்த முடியாத குறைபாட்டை இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி குணப்படுத்தும்.. உணவே மருந்து என்று வாழ்ந்த பண்டைய தமிழ் சமூகத்தில் மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, கிச்சிலி சம்பா, பொன்னி, வாசரமுண்டான், என இருபதாயிரத்திற்கும் அதிக நெல் வகைகளை கொண்ட நமது பாரம்பரிய விவசாயம் காலப்போக்கில் அத்தனையும் இழந்து திரு நெல்.ஜெயராமன் அவர்கள் முயற்சியால் இருநூறுக்கும் மேற்பட்ட வகைகளை மீட்டெடுத்தது... மாப்பிள்ளை சம்பா  180 நாள் பயிர் இந்த மாப்பிள்ளை சம்பா 180 நாள் மகசூல் பயிர்

RNR , 45 நாள் நெல் சரியான வளர்ச்சி இல்லை என்ன செய்யலாம்

 RNR, 45 days paddy can not grow properly What can be done? RNR , 45 நாள் நெல் சரியான வளர்ச்சி இல்லை என்ன செய்யலாம்  வளர்ச்சி குறை மகசூலை பாதிக்குமா  அல்லது நாட்களை அதிக பாடுத்துமா   RNR 45 என்பது தெலுங்கானா மாநில  நெல் ஆராய்ச்சி நிலையத்தால் கண்டுபிடிக்க பட்டது . தமிழகத்திலும் பரவலாக சில பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது  ஒரு ஏக்கருக்கு 2400 கிலோ வரும். சன்னராகம் என்பதைவிட ஒரு அதிகப்படியான கவனிப்பு தேவை உள்ள ரகம். நிறைய இடுபொருட்கள் கொடுக்கவேண்டும். சற்று நீளமான  கதிர்களை கொண்டுள்ளதால் பயிர் ஓரளவுக்கு சாயும் தன்மை உடையது.  எனவே சம்பா வில் பத்து நாட்கள் கழித்து நடவு செய்வதன் மூலம் மழை மற்றும் வெள்ள சேதத்தால் பாதிக்க படுவதை தவிர்க்கலாம் . குறைந்தபச்சம்  ஏதவது ஒரு இடுபொருள் தரைவழி போகவேண்டும் மேலும் பத்து நாட்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு இடுபொருள் தெளிக்கவேண்டும். முக்கியமாக ஒருதடவை மீன் அமிலம் ,பஞ்சகாவியா , ஈ எம் கரைசல் போன்றவற்றை பத்து நாட்களுக்கு ஒருமுறை கொடுக்கவேண்டும் எல்லாவற்றையும் அளவாக கொடுத்தால் வளர்ச்சியும் அளவாக இருக்கும்  நெல் இயற்கை விவசாயம் 

இயற்கை முறையில் நெல் பாக்டீரியல் ப்ளாஸ்ட் கட்டுப்படுத்துவது எப்படி

How to control bacterial blast in paddy naturally நெல்  பாக்டீரியல் ப்ளாஸ்ட்  வரும்முன்  காப்பது  Precaution rice before bacterial plastids நோயற்ற பயிரிலிருந்து விதைகளைத் தேர்வு செய்ய வேண்டும். வயல் மற்றும் வரப்புகளில் உள்ள களைகளை அகற்ற வேண்டும். நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான ஆடுதுறை 36, ஐ.ஆர்.20 மற்றும் கோ 47 ஆகியவற்றைப் பயிர் செய்தல். சூடோமோனாஸ் துகள் கலவை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் 400 மி.லி. தண்ணீரில் கலந்து விதைப்பதால்  பாக்டீரியல் ப்ளாஸ்ட் தாக்குதல் குறைகின்றது. சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ் பொடியுடன் உலர் விதை நேர்த்தி மேற்கொள்ள வேண்டும். (10 கிராம்/கிலோ விதை) 25 சதுர மீட்டர் பரப்பு உள்ள நாற்றங்காலில் 2.5 செ.மீ ஆழம் வரை நீர் தேக்கி வைக்க வேண்டும். இந்த தேங்கிய நீரில் 2.5 கிலோ சூடோமோனஸ் ஃபுளோரோசன்ஸ் பொடியைத் துாவி நன்கு கலக்க வேண்டும். நாற்றுக்களின் வேர்களை, இதில் 30 நிமிடங்கள் ஊற வைத்து பின் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 45 நாட்களுக்கு பின் 10 நாட்கள் இடைவெளியில் சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ் பொடியை 0.5% என்ற அளவில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.  நெல்  பாக்டீரியல் ப்ளாஸ்ட் தெ