- Get link
- X
- Other Apps
மதுரை பகுதியில் ஆடுதுறை 39: ஆடுதுறை 39 ரகம் விவசாயிகள் கல்சர் நெல் என்று சொல்வார்கள். மதுரை பகுதியில் ஆடுதுறை 39 ரகம் இரண்டாவது பயிராக சாகுபடி செய்தபோது ஆடுதுறை 43 மற்றும் 45 ரகத்தைவிட அதிக மகசூலினைக் கொடுக்கின்றது. இந்த ரகம் ஐ.ஆர்.8 மற்றும் ஐ.ஆர்.20 ரகங்களை கருவொட்டு செய்து உருவாக்கப்பட்டது. மழை, பனி, குளிர் பட்டங்களில் பூஞ்சாள நோய்களால் பாதிக்கப் படுவதில்லை. தஞ்சை தாளடியில் ஆடுதுறை 39: தஞ்சை மற்றும் நாகை மாவட்டங்களில் தாளடி பட்டதில் ஆடுதுறை 39 ரகம் மிக சிறப்பாக சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. மேலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையிலும் நல்ல மகசூலினைக் கொடுக்கின்றது. மணல்பாங்கான நிலத்திற்கும் ஏற்றதாக உள்ளது. வயதான நாற்றினை நடவேண்டிய நிர்ப்பந்தத்திலும் மகசூல் பாதிக்கப்படுவதில்லை. ஆடுதுறை 39 ரகத்தில் எலிவெட்டு பாதிப்பு மிகவும் குறைவு. மற்றும் அறுவடை சமயம் பயிர் கீழே சாய்வதில்லை. புழுதிக்கால் சாகுபடியில் ஆடுதுறை 39: தமிழகத்தில் மிக அதிக பரப்பளவில் புழுதிக்கால் சாகுபடி செய்யும் மாவட்டம் காஞ்சிபுரம். வடகிழக்குப் பருவமழை உதவியினால் இந்த சாகுபடி பல வருடங்களாக தொடர்ந்து செய்யப்பட்டு வரு